• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Litro Gas Lanka Ltd கம்பனியின் அம்பாந்தோட்டை LP எரிவாயு நிரப்பும் பொறித்தொகுதி கருத்திட்டம்
- அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு, பதுளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு செலவுப் பயன்களை வழங்கும் குறிக்கோளுடன் எரிவாயு களஞ்சிய முனைவிடத்தில் LPG உருளை நிரப்பும் பொறித்தொகுதி வசதியொன்றை நிறுவுவதற்கு Litro Gas Lanka Ltd கம்பனி திட்டமிட்டுள்ளது. அதற்கிணங்க, இப்பொறித் தொகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 647.2 மில்லியன் ரூபா தொகையொன்றுக்கு ஆகக்குறைந்த மிக ஏற்புடையதான விலைமனுதாரரான M/s. Dockyard General Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.