• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்னலைவாங்கி பொதி மின்கடத்திகளின் (Aerial Bundle Conductors) வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- விநியோகம் மற்றும் புதிய மின்சார இணைப்புகள் தொடர்பான பராமரிப்பு செயற்பாடுகள் கருதி விநியோக பிராந்தியங்கள் சார்பில் வெவ்வேறாக தேவையான பொருட்களை இலங்கை மின்சாரசபை கொள்வனவு செய்கின்றது. அதற்கிணங்க, நான்கு (04) விநியோக பிராந்தியங்கள் சார்பில் (ABC) 3X70+54.6 sqmm - 700km கொண்ட நீளத்திற்கு மின்னலைவாங்கி பொதி மின்கடத்திகளின் வழங்கல் மற்றும் விநியோகம் கருதி போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, கூறப்பட்ட வழங்கல் மற்றும் விநியோகத்திற்கான மேற்போந்த ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 363.7 மில்லியன் ரூபா தொகையொன்றுக்கு ஆகக்குறைந்த மிக ஏற்புடையதான விலைமனுதாரரான M/s.Sierra Cables PLC (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.