• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம், நுரைச்சோலை விக்டோரியா தோட்டத்தில் வீடமைப்புத் தொகுதியின் அணுகு வீதிகள், மதகுகள் மற்றும் வீதி மின் விளக்குகளை நிர்மாணித்தல்
- லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் புத்தளம், நுரைச்சோலை விக்டோரியா தோட்டத்திலுள்ள வீடமைப்புத் தொகுதியின் அணுகு வீதிகள், மதகுகள் மற்றும் வீதி மின் விளக்குகள் என்பவற்றின் நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 332.7 மில்லியன் ரூபா தொகையொன்றுக்கு ஆகக்குறைந்த மிக ஏற்புடையதான விலைமனுதாரரான M/s.Sierra Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.