• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாதியர் பீடத்தை தாபித்தல்
- பாரிய அளவிலான தாதியர் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் இலங்கையின் தாதியர் உத்தியோகத்தர்களின் சேவைகளின் தரம் சார்ந்த அம்சத்தை மேம்படுத்துவதன் மூலம் உத்தமமான சேவையொன்றை வழங்குவதற்கு பட்டதாரிகளாக அவர்களை சுகாதார சேவைகளுக்கு குறித்தொதுக்குவதற்கும் விசேட தாதியர் பீடமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நோக்கத்திற்கு அவசியமானத் திட்டங்கள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் உடன்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, ஶ்ரீ ஜயவர்த்தனபுர தாதியர் கல்லூரியின் வளாகத்தில் பிரேரிக்கப்பட்ட தாதியர் பீடத்தையும் முல்லேரியாவவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் வளாகத்தில் பிரதான மாணவர் விடுதி கட்டடத் தொகுதியையும் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், உரிய நிர்மாணத்தின் ஒப்பந்தங்களை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.