• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி கங்கைக்கு மேலாக புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம், இரும்பு பால பகுதி நிருமாணத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- களனி கங்கைக்கு மேலாக புதிய பாலமொன்றின் நிருமாண கருத்திட்டத்தின் பொதி I இன்கீழ் நிருமாணிக்கப்படவுள்ள இரும்பு பால பகுதியின் நிருமாணம் கருதி உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, கூறப்பட்ட இரும்புப்பால பகுதியின் நிருமாணத்திற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 31,539 மில்லியன் ரூபா தொகையொன்றுக்கு M/s.JFE Engineering Corporation, Mitsui Engineering & Shipbuilding Co. Ltd மற்றும் M/s. TODA Corporation ஆகியவற்றை உள்ளடக்கிய யப்பானின் JMT கூட்டு தொழில்முயற்சிக்கு வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.