• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடுவெல - அத்துருகிரிய வீதி மற்றும் வல்கம - அத்துருகிரிய வீதி ஆகியவற்றை மேம்படுத்துதல்
- மேல் மாகாண வீதி அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில், சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடனின் பகுதியொன்றை பயன்படுத்தி, கடுவெல - அத்துருகிரிய (B 174) வீதியின் 0 கிலோமீற்றரிலிருந்து 9.5 கிலோமீற்றர் வரையான வீதிப் பகுதியையும் வல்கம - அத்துருகிரிய (B 451) வீதியின் 0 கிலோமீற்றரிலிருந்து 1.2 கிலோமீற்றர் வரையான வீதிப்பகுதியையும் விருத்தி செய்வதற்கும் புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட நிருமாண வேலைக்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், கூறப்பட்ட வீதிப் பிரிவுகளை விருத்தி செய்தல் மற்றும் புனரமைத்தலுக்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசுகளுக்கிணங்க, 1,065 மில்லியன் ரூபா தொகையொன்றுக்கு ஆகக்குறைந்த மிக ஏற்புடையதான விலைமனுதாரரான M/s.Hovael Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.