• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரை பாலங்கள் மற்றும் புகையிரத பாதைகளைத் வடிவமைப்பதற்கான மதியுரை சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
- இலங்கையின் புகையிரத வலையமைப்பின் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதியுடன் இணைந்த அபிவிருத்தியின்மீது கவனம் செலுத்தி 2035 ஆம் ஆண்டளவில் புகையிரத சேவைகளுக்கான கேள்வியினை ஈடுசெய்யும் பொருட்டு 'கொழும்பு - புறநகர் புகையிரத கருத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும்.. இக்கருத்திட்டத்தின் முன்-சாத்தியத்தகவாய்வு தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், குறுகியகால அபிவிருத்தி பிரேரிப்பொன்றாக மருதானையிலிருந்து மாளிகாவத்தை வரை 04 புதிய புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கு இதன் ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேலதிக புகையிரத பாதையை நிர்மாணிப்பதற்கும் இதன் சார்பில் மாளிகாவத்தை பாடசாலை ஒழுங்கை பாலம் உட்பட மருதானை பயணிகள் பாலம் என்பவற்றை விரிவுபடுத்துவதற்கும் தேவையான மதியுரை சேவைகளை புகையிரத திணைக்களத்தின் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.