• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி கருதி வீடமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் கண்டி வைத்தியசாலை காணியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களை வௌியேற்றுதல்
- 2,402 கட்டில்களுடன்கூடிய கண்டி போதனா வைத்தியசாலையே இலங்கையிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய வைத்தியசாலையாகும். வருடாந்தம் கிட்டதட்ட 1,600,000 நோயாளர்களுக்கு சிகிச்சையினை வழங்கும் இந்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இடவசதி மட்டுப்பாடானது பிரதான தடையொன்றாக மாறியுள்ளது. இந்த வைத்தியசாலைக்குச் சொந்தமான காணி விஸ்தீரணமானது 58.4 ஏக்கர்களாகவுள்ளபோதிலும் 23.7 ஏக்கர்கள் விஸ்தீரணமானது அத்துமீறுபவர்களால் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக, இவ்வளாகத்திற்குள் வசதிகளின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க , கண்டி போதனா வைத்தியசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்து வதற்கு தேவைப்படும் கூறப்பட்ட காணியை மீள சுவீகரிப்பதற்கும், குறைந்த வருமானம் ஈட்டும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை வௌியேற்றும் தீர்மானத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அத்தகைய குடியிருப்பாளர்களுக்கென வைத்தியசாலை காணிக்குள் புறம்பான பிரதேசமொன்றில் 66 வீடுகளை உள்ளடக்கும் வீட்டுத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கென அமைச்சுக்கு குறித்தொதுக்கப்படவுள்ள ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு வீடுகளை குறித்தொதுக்குவதற்குமென விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினாலும் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினாலும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் செய்யப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.