• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விளையாட்டு நூதனசாலையின் புதிய கட்டடத்தின் 2 ஆம் கட்டத்தை பூர்த்தி செய்தல்
- விளையாட்டுக்கள் தொடர்புபட்ட தகவல்கள் மற்றும் வரலாற்று பெறுமதிகொண்ட ஞாபகச்சின்னங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்குடன் 'தேசிய விளையாட்டு நூதனசாலையினை' தாபித்தல் தொடர்பிலான செயற்பாடுகள் கொழும்பு 07 இலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றுவருகின்றன. தேசிய விளையாட்டு மன்றங்களின் வரலாறு, விளையாட்டுக்கள் பற்றிய தரவுதளம், பதிவுகள், சருவதேச போட்டிகளில் வெற்றியீட்டிய புகழ்பூத்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளின் உருவத்தையொத்த மெழுகுச் சிலைகள் ஆகியவற்றை உள்ளடக்குவதற்கு அவசியமான காட்சியகங்களுடன் இந்த நூதனசாலை அமைக்கப்படும்.

இந்த நூதனசாலையானது 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதத்தில் திறக்கப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது, ஆதலால், அதன் 2 ஆம் கட்டத்துடன் தொடர்புபட்ட, உள்ளக சோடனை மற்றும் இலத்திரன் உபகரணம் போன்றவற்றை பொருத்துதல் சார்பிலான நிருமாண செயற்பாடுகள் கருதி திறைசேரி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டும் இந்த நூதனசாலையில் பேணிப்பாதுகாக்கப்படும் பொருட்டு உரிய அரசாங்க நிறுவனங்களிடமிருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற விளையாட்டுக்கள் தொடர்புபட்ட கடந்தகால தகவல்களைப் பெற்றுக்கொள்தலும் பொருட்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.