• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனித செயற்றிறன் ஆய்வுகூடத்தை நிருமாணித்தல்
- விளையாட்டுத்துறையில் சருவதேச வெற்றியினை அடைந்துகொள்ளும் நோக்கத்திற்காக, இயல்பான ஆற்றல்கள் மற்றும் பாரம்பரிய பயிற்சி முறைகள் மாத்திரம் போதுமானதாகவன்றி நவீன தொழினுட்ப பயன்பாடு மற்றும் சரியானதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான பயிற்சி முறைகள் மற்றும் உடலியக்கம் சார்ந்த பொறிமுறைகள் ஆகியனவும் அத்தியாவசியமானதாகும். சருவதேச விளையாட்டரங்கில், விளையாட்டுக்கள் சார்ந்த காயங்களை தடுப்பதன் மூலம் உத்தமமான மட்டமொன்றில் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளின் திறன்களை பேணும் பொருட்டு மானிட அசைவு மற்றும் கட்டமைப்புசார் குறைபாடுகளை பகுப்பாய்வு செய்யும் 'மனித செயற்றிறன் ஆய்வுகூடங்களின்' வசதிகளை அபிவிருத்தி அடைந்த நாடுகள் பயன்படுத்துகின்றன.

அதேபோல் இலங்கையிலும் அத்தகைய மனித செயற்றிறன் ஆய்வுகூட மொன்றின் நிருமாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் இவ்வாண்டில் பூர்த்தி செய்யப்படும். உத்தமமான மட்டமொன்றில் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளின் திறன்களை பேணுவதற்கான அளப்பரிய உதவியினை இவ்வாய்வுகூடம் வழங்கும். அதற்கிணங்க, இவ்வாய்வுகூடத்திற்குத் தேவைப்படும் உயர் தொழினுட்ப உபகரணத்தை கொள்வனவு செய்யும் பொருட்டும் நிபுணர்களின் மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பொருட்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.