• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருநாகல் மாநகர எல்லைகளுள்ளும் வாரியபொல நகரத்திலும் புதிய இரண்டு தேசிய பாடசாலைகளை தாபித்தல்
- குருநாகல் மாநகர எல்லைகளுள் 09 தேசிய சிங்கள மொழிமூல பாடசாலைகள் உள்ளதுடன், ஆண்டு 01 இற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் 5,228 விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதிலும், 1,425 மாணவர் தொகையினர் மட்டுமே அவற்றுக்கு அனுமதிக்கப்படக்கூடியதா கவிருந்தனர். இதனையொத்ததாக, வாரியபொல நகரத்தில் 01 தேசிய பாடசாலை மாத்திரமே உள்ளதுடன், ஆண்டு 01 இற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்காக 2016 ஆம் ஆண்டிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட 503 விண்ணப்பங்களில், 240 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடியதாகவிருந்தது.

இச்சூழ்நிலைகளை கவனத்திற்கொண்டு, சகல வசதிகளையும் உள்ளடக்கி பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 02 புதிய தேசிய கலவன் பாடசாலைகளை குருநாகல் மற்றும் வாரியபொல தேர்தல் தொகுதிகளில் தாபிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும் தேசிய பாடசாலைகளைத் தாபித்தல் தொடர்பில் தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென்றும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.