• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய நீர்ப்பாசன முறைமைகளுடன் இணைந்த இனங்காணப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அண்மையில் ஏற்பட்ட வரட்சி மற்றும் வௌ்ளப்பெருக்கு நிலைமைகளின் அளவைக் கவனத்திற்கொண்டு, விவசாயதுறைமீதான காலநிலை மாற்றத்தாக்கங்களை குறைப்பதற்கும் அச்சூழலுக்கு இசைவாகுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அமைச்சுக்களுக்கிடையிலான நிபுணர் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, உலர்வலயத்தின் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சிறிய பண்ணையாளர்களின் காணிகள் மீது நவீன தொழினுட்ப பயன்பாட்டை இயலுமைப்படுத்தி பண்ணையை அணுகும் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் நடைமுறையிலுள்ள விவசாய கிணறுகளை புனரமைத்து நீரைப் பாதுகாக்கும் விவசாயம் நோக்கி பண்ணையாளர்களை ஊக்குவிப்பதற்குமான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.