• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்திக் கருத்திட்டங்களுக்காக கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத வயற் காணிகளைப் பயன்படுத்துதல்
- இலங்கையில் மின்சார பிறப்பாக்கத்திற்காக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதுடன், சூரிய சக்தி மூலம் மின்சாரம் பிறப்பாக்கத்திற்காக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 'சூரியபல சங்கிராமய' கருத்திட்டத்தின் கீழ், சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பிறப்பிப்பதற்கும் அதனை தேசிய மின்சார வலைப்பின்னலுக்கு வழங்குவதன் மூலம் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் யாரேனும் வாடிக்கையாளருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மின்சார கேள்வி உயர்வாகவுள்ள மேல் மற்றும் சப்பிரகமுவ போன்ற மாகாணங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பிறப்பாக்கத்திற்கான சாத்தியப்பாடொன்று காணப்படுகின்ற போதிலும் இந்நோக்கத்திற்குத் தேவைப்படும் காணிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. 1 மெகாவொட் (1MW) இயலளவுடன்கூடிய சூரிய சக்தி மின்சார பிறப்பாக்க கருத்திட்டத்துடன் இணைந்த காணியொன்றுக்கு பொதுவாக 3-5 ஏக்கர்கள் கொண்ட பிரதேசமொன்று தேவைப்படுகின்றது. இதற்கிணங்க, கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்தினதும் ஏனைய அதிகாரிகளினதும் உடன்பாட்டுடன் சூரிய சக்தி மின்சார பிறப்பாக்க கருத்திட்டங்களுக்காக மேல் மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத வயற் காணிகளைப் பயன்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.