• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில்களை தாபிக்கும் பொருட்டு பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
- பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்குடன், கைத்தொழில் பேட்டைகளில் முதலீடு செய்வதன் பொருட்டு பொருத்தமான கைத்தொழிலாளர்களை தெரிவு செய்வதற்கென பத்திரிகை விளம்பரங் களுக்கூடாக பிரேரிப்புக்கள் கோரப்பட்டுள்ளன. ஆதலால், இதுகுறித்து சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட பிரேரிப்புகளை மதிப்பீடு செய்த பிராந்திய கைத்தொழில் சேவை குழுக்களினதும் அமைச்சு கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவினதும் சிபாரிசுகளுக்கு அமைய லக்ச உயன, திருகோணமலை - கட்டம் 2, மட்டக்களப்பு, மத்துகமை, ஹோமாகம, இரத்மலானை, மில்லேவ, கலிகமுவ, நாலந்த எல்லாவல, புத்தல, கரந்தெனிய, பட்ட அத்த, தங்கொட்டுவ, புத்தளம், நாலந்த மற்றும் உலப்பனை பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் அமைந்துள்ள காணித் துண்டுகளை தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் குறித்தொதுக்கும் பொருட்டும் 26 கைத்தொழில் கருத்திட்டங்களை தாபிக்கும் பொருட்டும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.