• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற அரசாங்க விருது விழாக்கள் மற்றும் வேறு ஞாபகார்த்த விழாக்கள் தொடர்பாக ஒதுக்கப்படும் நிதி ஏற்பாட்டை அதிகரித்துக் கொள்ளல்“
- இலங்கையின் கலாசார மரபுரிமையினை பாதுகாத்து, மேம்படுத்தி தழைக்கச் செய்யும் நோக்குடன் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பல்வேறுபட்ட பதினைந்து அரசாங்க விருது விழாக்கள் மற்றும் சில ஞாபகார்த்த விழாக்கள் என்பன ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்றன. சில அரச விருது விழாக்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடாத்தப்படுவதுடன், உயர்தரம் மற்றும் நியமம் கொண்ட கலாசார மறுமலர்ச்சிக்கு இது பெரிதும் துணைபுரிவதாக இருந்துள்ளது.

இவ் அரச விருது விழாக்களில் வெற்றியாளர்களுக்கு அளிக்கப்படும் பணவிருதுகளின் தொகை நீண்டகாலமாக அதிகரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், இதுவரை பாராட்டுதலுக்கு உட்பட்டிராத பிரதான கலைத்துறைகள் தொடர்பில் சில புதிய அரச விருது விழாக்கள் அரச மட்டத்தில் நடாத்தப்படும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதனால் இவ் விருதுகளின் ஏற்பாட்டுச் செலவும் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்துள்ளதுடன், மேலதிக நிதி ஏற்பாடுகளும் அவசியமாகியுள்ளன. ஆதலால், வெவ்வேறுபட்ட துறைகளிலுள்ள கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு நடாத்தப்படும் அரச விருது விழாக்களுக்கென, பொதுத்திறைசேரியினால் ஆண்டுதோறும் குறித்தொதுக்கப் படும் தற்போதுள்ள 55 மில்லியன் ரூபா கொண்ட ஏற்பாட்டை 100 மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்கும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.