• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு புதிய கட்டட தொகுதியொன்றை நிர்மாணித்தல்“
- தற்போது கம்பஹா மாவட்ட செயலகம் அமைந்துள்ள பழைய கட்டடமானது பொதுமக்களுக்கு வினைத்திறன் வாய்ந்ததும் பயனுறுதி வாய்ந்ததுமான சேவையினை வழங்குவதற்கு பொருத்தமற்றதாக உள்ளதென்பது கண்டறியப்பட்டுள்ளது.. சில இடங்களில் தற்போது பரம்பியுள்ள அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களை மாவட்ட செயலக வளாகத்திற்குள் இடமாற்றுவதும், கம்பஹா நகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைப்பை விளைவிக்கும்.

அதற்கிணங்க கம்பஹா மாவட்ட செயலகத்திற்கென 2,960 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் அண்ணளவாக 200,000 சதுரஅடி கொண்ட 07 மாடி கட்டடத்தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.