• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்பிரகமுவ மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி
- இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 9% ஆன சனத்தொகையினர் வாழ்ந்துவருகின்ற சப்பிரகமுவ மாகாணத்தில் சுகாதார பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் தேவையானது இனங்காணப்பட்டுள்ளது. இம்மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளான இரத்தினபுரியிலுள்ள மாகாண பொது வைத்தியசாலையும் கேகாலையிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலையும் மிகுந்த நெருக்கடி மிக்கதாக இருப்பதனால், மக்களால் இலகுவில் அணுகக்கூடியதும் தரமான சுகாதார பாதுகாப்புச் சேவையினை கொண்டிருக்கக்கூடியதுமான மாவனல்ல, கரவனல்ல, பலாங்கொடை மற்றும் கலவான ஆகிய ஆதார வைத்தியசாலைகளையும் ரம்புக்கனை மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேச வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்தல் அத்தியாவசியமானதாகுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவ்வொவ்வொரு வைத்தியசாலையிலும் வேறுபட்ட புதிய சிகிச்சை நிலையங்கள் மற்றும் சிகிச்சையலகுகளைத் தாபிப்பதற்கும் கட்டில்களின் எண்ணிக்கையை 250 இனால் அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால், 1,547 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.