• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மேம்படுத்துதல்
- இலங்கை வைத்தியசாலைகளில் இறப்பிற்கான இரண்டாவது பிரதான காரணமாக புற்றுநோய் மாறியுள்ளது. புற்றுநோய் நோயாளர்களின் எண்ணிக்கையிலான சமீபத்திய அதிகரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அந்நோயாளர்களுக்கு விசேட சிகிச்சை சேவைகளை வழங்கும், தென்மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலையான கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

ஆதலால், இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள புற்றுநோய் சேவை சிகிச்சை வசதிகளை விரிவாக்கும் பொருட்டு, வௌிநோயாளர் பிரிவு அயோடின் சிகிச்சையலகு, சிகிச்சை நிலையங்கள், 03 கழலையியல் அலகுகள், கழலை சத்திரசிகிச்சை மற்றும் குழந்தை கழலையியல் அலகுகள், ஓர் ஆய்வுகூடம் மற்றும் கேட்போர்கூட வசதிகள் ஆகியவற்றுடன் சேர்ந்த பத்து மாடி கட்டட மொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து 2,000 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட செலவொன்று உறப்படவுள்ளது. Colours of Courage Trust (COC) எனும் அறநெறி அமைப்பானது இக்கருத்திட்டத்தின் கூட்டு அமுலாக்கம் கருதி அதன் பங்களிப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், நாடு பூராகவும் நடைபவணிகளை நடாத்துவதன் மூலம் இவ்வமைப்பினால் சேகரிக்கப்படும் நிதி உதவியை இந்நோக்கம் கருதி, பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, கராபிட்டிய போதனா வைத்தியசாலை யிலுள்ள புற்றுநோய் சிகிச்சை சேவைகளை விரிவாக்கும் பொருட்டு பிரேரிக்கப்பட்ட பத்து (10) மாடிக்கட்டடத்தின் நிர்மாண வேலையை மேற்கொள்வதற்கென சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் Colours of Courage Trust (COC) எனும் அறநெறி அமைப்பிற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.