• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுதாயத்திற்கான விஞ்ஞான, தொழினுட்பவியல் கருத்தரங்கு - 2018
- அபிவிருத்தியடைந்த உலகில் விஞ்ஞான, தொழினுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி துறைகளிலான முனேற்றத்திலிருந்து நன்மைகளை அடைந்து கொள்தல் மற்றும் தேசிய அபிவிருத்தி செய்முறைக்கு விஞ்ஞான தொழினுட்ட மற்றும் ஆராய்ச்சி பற்றிய அறிவின் பங்களிப்பை அதிகரித்துக் கொள்தல் எனும் குறிக்கோளுடன் 'இலங்கையின் சமுதாயத்திற்கான விஞ்ஞான, தொழினுட்ப வியல் கருத்தரங்கு' முதலில் 2016 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டதுடன் உள்நாட்டு விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் கருத்திட்டங்கள் நோக்கி வௌிநாடுகளில் வாழும் இலங்கை விஞ்ஞானிகளின் ஆதரவை உண்டு பண்ணுவது சாத்தியப்பாடாக இருந்துள்ளது. இதன் முதலாவது கருத்தரங்கின் வெற்றியை கவனத்திற்கொண்டு, இத்துறையில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஏனைய நாடுகளினதும் சர்வதேச அமைப்புக்களினதும் பிரதிநிதிகள், புகழ்பூத்த இலங்கையின் வௌிநாட்டிலுள்ள விஞ்ஞானிகள், அரச மற்றும் தனியார் துறை தொழினுட்பவியலாளர்கள், புத்துருவாக்குனர்கள் மற்றும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் அடங்கலாக அண்ணளவாக 1,000 ஆட்களின் பங்குபற்றலுடன் இரண்டாவது முறையாக இதை நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகள் கருதி பொருளாதார அபிவிருத்தி, விஞ்ஞான மற்றும் தொழினுட்பவியல் புத்துருவாக்கங்கள் ஆகியவற்றை இயலுமைப்படுத்தி வளர்ந்துவரும் தொழினுட்பங்களை இனங்கண்டு கொள்தல் இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள தொனிப் பொருளாகும். ஆதலால் 'இலங்கையின் சமுதாயத்திற்கான விஞ்ஞான, தொழினுட்பவியல் கருத்தரங்கை' இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடாத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.