• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிநவீன தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபித்தல்“
- அறிவு சார்ந்த சமுதாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு நாட்டிற்கான விஞ்ஞான கலாசாரம் அத்தியாவசியமான காரணியொன்றாகும்.. விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் பொருட்டு முழுமையாக விருத்தியடைந்த விஞ்ஞான நிலையங்களை தாபித்தலானது உலகம் பூராகவும் பல நாடுகளினால் பின்பற்றப்பட்டுவரும் நடவடிக்கையாகும். ஆதலால், பரிசோதனைகள் போன்றவற்றை நடாத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு வழிசமைப்பதற்காக விசேடமாக பாடசாலை மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவை வழங்கும் குறிக்கோளுடன் நாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்தவிலுள்ள தொழினுட்ப நகரிலிருந்து (Technocity) குறித்தொதுக்கப்பட்ட காணித் துண்டில், 2,550 மில்லியன் ரூபா செலவிலும் சர்வதேச நியமங்களுக்கு இணங்கவும் தேசிய விஞ்ஞான நிலையமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.