• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடும் நிலச்சரிவு ஆபத்துள்ள மாவட்டங்களில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர மாவட்ட அலுவலகங்களைத் தாபித்தல்
- தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமானது, கொழும்பிலுள்ள அதன் தலைமை அலுவலகம் மற்றும் நிலச்சரிவு ஆபத்துமிக்க 09 மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்கள் ஊடாக நிலச்சரிவு புலனாய்வுகள், அனர்த்தம் ஏற்படக்கூடிய வலயங்களை வரைபடம் மூலம் திட்டமிடல், விழிப்புணர்ச்சியை உருவாக்குதல், முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்தல் மற்றும் நிலச்சரிவு ஆபத்துமிக்க பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சகல நிருமாணம் மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு முன்னதாக நிலச்சரிவு ஆபத்து மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல் போன்ற சகல தொடர்புபட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகும். காலநிலை மாற்றத் தாக்கங்கள் மற்றும் கடும் மழை எவற்றையேனும் கொண்டுவரும் மாறிவரும் பருவகால பாங்குகள் காரணமாக, நிலச்சரிவுகளினதும் நிலக்கட்டமைப்புக்கள் இடிந்துவிழும் நிகழ்வுகளினதும் முன்னொருபோதுமில்லாதவாறான அதிகரிப்பானது அவதானிக்கப்பட்டுள்ள கண்ணோட்டத்திலும் வினைத்திறன் மிக்க விதத்தில் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாகவும், மிகப்பாரதூரமான இரு (02) நிலச்சரிவு ஆபத்துமிக்க மாவட்டங்களில் நவீன ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய நிரந்தர அலுவலக கட்டடங்களை நிருமாணிக்கும் பொருட்டும் அதன்பின்னர் தேவைக்கு ஏற்ப அத்தகைய வசதிகளை ஏனைய மாவட்டங்களுக்கும் அதேபோல் வழங்கும் பொருட்டும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.