• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக வீடுகள் முழுமையாக சேதமுற்றிருந்த அல்லது தங்குவதற்கு பொருத்தமற்று காணப்பட்டிருந்த ஆட்களுக்கு வீட்டு வாடகைப் படியை மேலும் செலுத்துதல்.
- கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட வௌ்ளம், நிலச்சரிவுகள் மற்றும் புயல் காரணமாக, பெரும் எண்ணிக்கையான மக்கள் இன்னலுக்கு உட்பட்டதுடன், தாம் வாழும் வீடுகள் முற்றாக இழந்தமை அல்லது தங்குவதற்கு பொருத்தமற்று காணப்பட்டமை அல்லது நிலச்சரிவு ஆபத்து கூடிய பிரதேசங்கள் காரணமாக வௌியேற்றப்பட்டிருந்த குடும்பங்கள் தொடர்பில், அவர்கள் வாடகை வீடுகளில் தற்காலிகமாக வதிவதற்கு ஏதுவாக மூன்று (03) மாத காலப்பகுதியொன்றுக்கு குடும்பமொன்றுக்கு 7,500/- கொண்ட வீட்டு வாடகைப் படியொன்றை மாதமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.. அதற்கிணங்க இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 3,584 குடும்பங்களுக்கு 2017 ஆம் ஆண்டு யூன், யூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சார்பில் வீட்டு வாடகை வழங்கப்பட்டது.

அத்தகைய குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றது. ஆதலால் அத்தகைய செயற்பாடுகள் நிறைவுறும் வரையில் அத்தகைய குடும்பங்களுக்கு தற்போது செலுத்தப்பட்டுவரும் வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் மூன்று (03) மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.