• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல்
- வெளிநாட்டலுவல்கள் அமைச்சானது தற்போது தொழிற்பட்டுவரும், கொழும்பு - 01 இலுள்ள குடியரசு கட்டடத்தில் போதிய அலுவலக இடவசதியின்மையினால் எதிர் கொள்ளப்படும் சிரமங்களை தீர்க்கும் பொருட்டு, அண்ணளவாக 30,000 சதுர அடி கொண்ட மேலதிக இடவசதியொன்றை பெற்றுக் கொள்தல் அவசியமானதாகும். ஒல்லாந்தர் காலத்தில் நிருமாணிக்கப்பட்டதும் அண்மைக்காலம் வரை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டதுமான குடியரசு கட்டடத்திற்கு நெருக்கமாகவுள்ள கட்டடத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் மூலம் திருத்துவிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.