• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பூகோள அமைவிட முறைமையினை (GPS) அறிமுகப்படுத்துவதற்கூடாக புகையிரத செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் புகையிரத இயக்கம் தொடர்புபட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குதல்
- பூகோள அமைவிட முறைமையின் அடிப்படையில் புகையிரத இயக்க தகவல் முறைமையொன்றை கொள்ளல் செய்வதன் மூலம் புகையிரதச் செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்து வதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் முன்னர் வழங்கப்பட்டுள்ளது.. இலங்கை புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அநுராதபுரம் மற்றும் நாவலப்பிட்டிய கட்டுப்பாட்டு மையங்களை இணைப்பதன் மூலம் பரந்துபட்ட நோக்கெல்லையை தழுவுதல், புகையிரத அட்டவணைகளை தன்னிச்சையாகவே தயாரித்தல், புகையிரத இயக்கம் தொடர்புபட்ட சகல அறிக்கைகளையும் உருவாக்குதல், புகையிரத கால தாமதம் பற்றிய கண்காணிப்பு முறைமையை பகுப்பாய்வு செய்தல் போன்வற்றிற்காகவும் புகையிரத இயக்கம் தொடர்புபட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் புகையிரத செயற்பாடுகளில் வினைத்திறனை மேம்படுத்துவதற்கென பூகோள அமைவிட முறைமையின் பயன்பாட்டை மேலும் விஸ்தரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புக்கு இணங்க , 31.8 மில்லியன் ரூபா தொகைக்கு அவ் அமைச்சிடமிருந்து உரிய இயக்க முறைமையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.