• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி மஹமோதர மகப்பேற்று வைத்தியசாலையின் நிருமாண வேலைகளை பூர்த்தி செய்வதற்காக குறைநிரப்பு நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளல்
- சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த, காலி மஹமோதர மகப்பேற்று வைத்தியசாலையின் நிருமாண வேலைகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான மேலதிக நிதி உதவியை வழங்குவதற்கு ஜேர்மனி அரசாங்கம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, இவ் அபிவிருத்தி செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு தேவைப்படும் 13 மில்லியன் யூரோ வரையான குறைநிரப்பு கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்கென ஜேர்மனியின் KfW (Kerditanstalt Fur Weideraufbau) வங்கியுடன் இணக்கப்பேச்சு நடாத்தி கடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.