• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை பாரம்பரிய தொழினுட்ப மரபுரிமைகள் நூதனசாலை மற்றும் தகவல் நிலையம் - பொலன்நறுவை
- வழமையான நூதனசாலையொன்றிலிருந்து வித்தியாசமான நாட்டின் நகரங்கள் மற்றும் பூங்காக்களை நிருமாணித்தல், நீர்ப்பாசன தொழினுட்பம், பழைய நீர் கொண்டுசெல்லல் முறை, உணவு பாதுகாப்பு முறை, போக்குவரத்து முறை, கட்டடக்கலை போன்ற பாரம்பரிய தொழினுட்ப மரபுரிமைகளை எடுத்துக் காட்டும் மரபுரிமை நூதனசாலையொன்றையும் தகவல் நிலையமொன்றையும் தாபிப்பது காலத்தின் தேவையாக இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, வரலாற்று சிறப்புமிக்க யுகத்திலிருந்து தற்காலம் வரையான பாரம்பரிய தொழினுட்ப துறையினதும் அரசாங்க நிறுவாகத்தின் முக்கிய கட்டங்களையும் உள்ளடக்கி கூடாரங்களைக் கொண்ட மரபுரிமை நூதனசாலையொன்றையும் தகவல் நிலையமொன்றையும் பொலநறுவை பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.