• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான உத்தேச நிகழ்ச்சித்திட்டம்
- 2018 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான உத்தேச நிகழ்ச்சித்திட்டம் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அமைச்சரவையினால் இது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக, 2018 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரை 2017 நவம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று நடாத்தப்படுவதோடு, ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு சம்பந்தமான பாராளுமன்ற விவாதம் 2017 நவம்பர் மாதம் 10 ஆம் 11 ஆம் 13 ஆம் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கும் இதன் குழுநிலை விவாதத்தை 2017‑11‑16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூனாறம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 2017‑12‑09 ஆம் திகதியன்று நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.