• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய டயர் தொகுதிகளை வழங்குதலும் விநியோகித்தலும்
- இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கு தேவையான டயர் தொகுதிகளை வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்யும் பொருட்டு திறந்த போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இரண்டு கேள்விதாரர்களினால் விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விலைகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் உரிய பல்வேறுபட்ட வகைகளைச் சேர்ந்த 33,672 டயர் தொகுதிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 1,115 மில்லியன் ரூபாவிற்கு M/s. Ceat Kelani International Tyres (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.