• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லிட்ரோ கேஸ் லங்கா கம்பனிக்குத் தேவையான திரவ பெற்றோல் வாயு கொள்வனவு செய்தல்
- 80 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டுள்ள நாட்டின் பாரிய எல்பி கேஸ் விநியோகஸ்தரான லிட்ரோ கேஸ் லங்கா கம்பனி ஊடாக விநியோகிப்பதற்குத் தேவையான எல்பி கேஸ் சருவதேச போட்டி கேள்வி முறையின் மூலம் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஒரு மெற்றிக் தொன் சவுதி அரம்கோ உடன்படிக்கை விலைக்கு 47.50 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சேர்க்கப்பட்ட விலையில் 2017 / 2018 ஆம் ஆண்டு சார்பில் இந்தக் கம்பனிக்கு தேவையான 300,000 மெற்றிக் தொன் எல்பி கேஸ் M/s. Shell International Eastern Trading Company நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.