• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு 07, டொறிங்டன் மாவத்தை, 115 ஆம் இலக்க மனையிடத்தில் 115 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
- கொழும்பு நகரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 'நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின்' கீழ் கொழும்பு 07, டொறிங்டன் மாவத்தை, 115 ஆம் இலக்க மனையிடத்தில் 115 வீட்டு அலகுகளை நிருமாணிப்பதற்காக தகைமைபெற்ற ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஐந்து கேள்விதாரர்களினால் பிரேரிப்புகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதோடு, இந்த பிரேரிப்புகளை மதிப்பிட்ட அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் உரிய ஒப்பந்தத்தை 395 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Subasinghe Contractors & Earth Movers நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது