• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு Whole Body MRI Scanner இயந்திரமொன்றை வழங்கி பொருத்துதல்
- மூளை மற்றும் மைய நரம்பு முறைமையின் பல்வேறுபட்ட நோய் நிலைமைகள் அதேபோன்று மார்பக மற்றும் இருதய நோய் நிலைமைகளை இனங்காண்பதற்காக செய்யப்படும் பரிசோதனைகளில் MRI ஔிப்படங்கள் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் ஊடாக வழங்கப்படும் சிகிச்சை சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்த பொது வைத்தியசாலைக்கு 3.0 Tesla Whole Body MRI Scanner இயந்திரமொன்றை கொள்வனவு செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இதன் சார்பில் திறந்த சருவதேச கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, மூன்று கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை மதிப்பிட்ட அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த M/s. Dimo (Pvt) Ltd நிறுவனத்திற்கு 45 மில்லியன் ரூபாவுக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.