• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி கட்டடங்களை நிருமாணித்தல்
- பொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞாபன பீடத்தில் தகவல் மற்றும் கற்கை நிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 516.54 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Sanken Coustruction (Pvt) Ltd., கம்பனிக்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்திற்கான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை 198.02 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.MDT Coustruction (Pvt) Ltd., நிறுவனத்திற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.