• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிவில் விமான சேவைகள் பயிற்சி நிலையத்திற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சிமியூலேட்டர் பயிற்சி முறைமையொன்றை வழங்கி, பொருத்தி, செயற்படுத்துதல்
- சிவில் விமான சேவைகள் பயிற்சி நிலையத்திற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சிமியூலேட்டர் பயிற்சி முறைமையொன்றை வழங்கி, பொருத்தி, செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானத்தின் பிரகாரமும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் M/s.Adacel Technologies Limited நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.