• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரிவெனா பிக்கு மாணவர்களுக்கு உதவிகளை வழங்குதல்
- பிக்கு மாணவர்களுக்கு முறையான கல்வியினை வழங்குவதற்கு நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட மெச்சத்தக்க கல்விமுறை பிரிவெனா கல்விமுறையாகும். ஆரம்ப பிரிவெனா, மகா பிரிவெனா மற்றும் கல்லூரி பிரிவென என 758 பிரிவெனாக்கள் தற்போது நாடுமுழுவதும் இயங்குகின்றன. இந்த பிரிவெனாக்களின் மாணவ பிக்குமார்களின் கல்வி பணிகளை மேம்படுத்துவதற்கு மாணவ உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு 2017 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பிரிவெனாக்களிலுள்ள மாணவ பிக்குமார்களின் நலனோம்பல் நடவடிக்கைகள், புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொள்ளல் வௌிவாரி நிகழ்ச்சித்திட்டங்கள், திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆங்கில கல்வி அறிவை விருத்தி செய்தல் மற்றும் பிரயாணச் செலவுகளை ஏற்றல் போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தும் பொருட்டு 'கல்வி மேம்பாட்டு உதவி' அந்தந்த பிரிவெனாக்களின் "Kruthyadikari' என்னும் கணக்கிற்கு வழங்குவதற்கும் கல்வி அமைச்சின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.