• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூடுகளில் கடல் மீன் வளர்ப்புக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையில் Continental Ceylon Sea Food (Pvt) Ltd., கம்பனியும் நோர்வே அரசாங்கத்தின் Continental Ceylon Sea Food A.S. Ltd., கம்பனியும் இணைந்து தாபித்துக் கொண்டுள்ள Global Sea Food (Pvt) Ltd., கம்பனியினால் கடல் கூடுகளில் கடல் மீன்களை வளர்க்கும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உயர் சந்தை கேள்வியுடனான Sea Bass, Pompano மற்றும் Grouper போன்ற விசேட மீன் இனங்களை வர்த்தக மட்டத்தில் வளர்ப்பதற்கு பிரேரிப்பொன்றைச் சமர்ப்பித்துள்ளது. இது உயர் சுற்றாடல் பாதுகாப்பு முறையினைப் பயன்படுத்தியும் நவீன தொழினுட்பத்தைப் பயன்படுத்தியும் இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

உயர் சாத்தியம் கொண்ட கருத்திட்டமொன்றாக இனங்காணப்பட்டுள்ள இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியார் பிரதேசத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான உள்நாட்டு கடற்பரப்பில் 150 ஹெக்டயார் கடல் பிரதேசத்தை Global Ceylon Sea Food (Pvt) Ltd., கம்பனிக்கு 30 வருட கால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.