• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி நகரத்தில் புதிய கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல்
- காலி மாவட்டத்திலும் அதேபோன்று தென் மாகாணத்திற்கும் உரியதான சில அரச விழாக்கள், சம்மேளனங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவை காலி நகரத்திற்கு அண்மையில் நடாத்தப்படுகின்றன. இந்த நோக்கங்களுக்காக தற்போது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவது உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்குச் சொந்தமான Hall de Galle என்னும் மண்டபமாகும். இதில் காணப்படும் வசதிகள் உட்பட இடவசதி இத்தகைய பணிகளுக்கு போதுமானதாகாது. ஆதலால், காலி மாவட்ட செயலகத்திற்காக புதிய கேட்போர் கூடமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, காலி நகரத்தில் நடாத்தப்படும் இத்தகைய நோக்கங்களுக்காக பொது கேட்போர் கூடமொன்றாக பயன்படுத்தும் பொருட்டு நவீன வசதிகளுடன் கூடிய 2,000 ஆசனங்களைக் கொண்ட கேட்போர் கூடமொன்றை தெற்கு அதிவேகப் பாதைக்கு நுழைவதற்குள்ள வீதிக்கு அருகாமையில் நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.