• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய வவுனியா நீர்வழங்கல் கருத்திட்டம் சார்பில் சாத்தியத்தகவாய் வொன்றை மேற்கொள்தல்
- வவுனியா பிரதேச செயலகப் பிரிவிலும் நீண்டகால சிறுநீரக நோய்க்கு கடுமையாக ஆளாகியுள்ள வவுனியா தெற்கு மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் பிரதான நோக்கில் பாரிய வவுனியா நீர்வழங்கல் கருத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக சாத்தியத்தகவாய்வொன்றைச் செய்து கொள்வதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கும் சீனாவின் M/s. China National Complete Plant Import & Export Corporation Limited (COMPLANT) நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன் படிக்கையொன்று கைச்சாத்திட்டுள்ளமை பற்றி நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.