• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரிட்டிகல யான்ஓயா தேசிய பூங்கா மற்றும் ஹொரவ்பத்தான தேசிய பூங்காவின் திருத்தப்பட்ட நிலப்பிரதேச எல்லைகள் என்பவற்றை பிரகடனப்படுத்தல்
- இத்தீவின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை தழுவி இடம்பெயர்ந்த காட்டு யானைகள் மற்றும் யானை குட்டிகளை பராமரிப்பதற்காக இலங்கையில் 'ரிட்டிகல யானை இடநகர்த்தல் மனை' அத்தகைய இரண்டாவது மனையாக தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமீபமாகவுள்ள வனப்பகுதியையும் உள்ளடக்கி 427.8 ஹெக்டெயர் விஸ்தீணரம் கொண்ட காணி ரிட்டிகல யான்ஓயா தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

மனித யானை மோதலை குறைக்கும் பொருட்டு, அடிக்கடி கிராமத்துக்குள் அத்துமீறி மூர்க்கமாக செயற்படும் யானைகளை பிடித்து கட்டுக்காவலில் அவற்றை வைத்திருப்பதற்காக தாபிக்கப்பட்ட ஹொரவ்பத்தான யானை தடுப்பு நிலையத்திற்கு சமீபமாகவுள்ள காணிப் பிரதேசத்தை உள்ளடக்கி ஹொரவ்பத்தான தேசிய பூங்காவின் நிலப் பிரதேச எல்லைகளை திருத்துவதற்கும் ஹொரவ்பத்தான தேசிய பூங்காவாக அதனை மீள பிரகடனம் செய்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, திருத்தப்பட்ட நிலப் பிரதேச எல்லைகளுடன் ரிட்டிகல யான்ஓயா தேசிய பூங்கா மற்றும் ஹொரவ்பத்தான தேசிய பூங்கா ஆகியவற்றை பிரகடனப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.