• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயிரியல் பாதுகாப்பு சட்டமூலமொன்றை வரைதல்
- உயிர்ப்பல்வகைத்தன்மையின் நிலைத்திருப்புத் தன்மையானது இயற்கை காரணங்கள் மற்றும் பல்வேறுபட்ட மனித செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்படுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகளின்றி உயிரியல் தொழினுட்ட அபிவிருத்திக்கு ஊடாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகள் சூழலுக்கு விடுவிக்கப்படுதலானது உயிர்ப்பல்வகைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஒன்றாக இருக்கும் மனித செயற்பாட்டின் வகையொன்றாகவும் இருப்பதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். இலங்கையில் உயிர்ப்பல்வகைத்தன்மையின் மீது ஏற்படவிருக்கும் தீங்கினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதலானது காலத்தின் தேவையாகும்.

உயிர்ப்பாதுகாப்புத் தொடர்பான கார்ட்டகேனா உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளபடியால், மனித சுகாதாரம் மற்றும் உயிர்ப்பல்வகைத் தன்மைக்கு ஆபத்தை விளைவிக்காத அல்லது குறைந்தபட்ச ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் மேம்படுத்தல், சந்தைப்படுத்தல் வர்த்தகச் செயற்பாடுகளில் பயன்படுத்தல், போக்குவரத்து, இறக்குமதி, ஏற்றுமதி, மீள் ஏற்றுமதி, மாற்றல், அகற்றுதல் மற்றும் விடுவித்தல் ஆகியவற்றுக்காக உயிரியல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளின் பாவனை கருதி அவசியமான சட்ட ஏற்பாடு இலங்கையினால் வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆதலால் உயிரியல் பாதுகாப்பு தொடர்பான புதிய வரைவுச் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.