• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிளகு விலை குறைவடைவதை முகாமிப்பதற்காக பொறிமுறை யொன்றைத் தயாரித்தல்
- சருவதேச சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் மிளகு விலை குறைவடைந்துள்ளதன் காரணமாக இன்னலுக்கு ஆளாகியுள்ள மிளகு செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தையும் வருமான பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் ஏற்ற பிரேரிப்புகளை முன்வைக்கும் பொருட்டு அமைச்சரவையினால் 2017-08-09 ஆம் திகதியன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம், உலர்ந்த மிளகு கிலோ கிராம் ஒன்றுக்கு 900/- ரூபாவை உத்தரவாத விலையாக பேணுவதற்கும் உத்தேச உத்தரவாத விலை மற்றும் நிலவும் சந்தை விலை என்பவற்றுக்கிடையிலான வித்தியாசத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கிலோகிராம் ஒன்றுக்கு 150/- என்னும் உச்சத்திற்கு உட்பட்டு, அரசாங்கத்தினால் நிவாரணமொன்றை வழங்கும் வழிமுறையொன்றை தயாரிப்பதற்குமாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சந்தையில் உலர் மிளகு விலை கிலோகிலாம் ஒன்றுக்கு 900/- ரூபாவை விஞ்சும் வரை இந்த நிவாரண நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.