• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகியவற்றைத் திருத்துதல்
-உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் புதிய தேர்தல் முறை சம்பந்தமான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் கட்டளைச் சட்டம் (திருத்த) சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைவாக உள்ளூராட்சி நிறுவனமொன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் போது தொகுதி மட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்தினை விஞ்சாத மேலதிக உறுப்பினர்கள் பட்டியலின் மூலம் தெரிவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் இதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகள் திருத்தப்பட வேண்டியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, 2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவையும் நகர சபை கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவையும் பிரதேச சபை சட்டத்தின் 4 ஆம் பிரிவையும் திருத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.