• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசுக்கு நகர மோட்டார் வாகன போக்குவரத்து கட்டடமொன்றை நிருமாணிக்கும் பணிகளை பூர்த்தி செய்தல்
- இலங்கை பொலிசுக்காக 11 மாடிகளைக் கொண்ட நகர மோட்டார் வாகன போக்குவரத்து' கட்டடமொன்றை கொழும்பு 12, மிஹிந்து மாவத்தையில் நிருமாணிப்பதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் ஆரம்ப ஒப்பந்தத்தின் கீழ் 03 மாடிகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. இதன் மீதி நிருமாணிப்பு பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 388.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு CML-MTD Construction Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.