• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவை நிருமாணித்தல்
-திருகோணமலை மாவட்டமும் காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் மாவட்டமொன்றாகும். ஆதலால், ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே இந்த நீண்டகால சிறுநீரக நோயை கண்டறிவதற்கும் இதனால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற் குமாக குருதி சுத்திகரிப்பு, காவறை சிகிச்சை மற்றும் இரசாயனக்கூட வசதிகள் என்பவற்றுடனான சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிருமாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்த சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 249.32 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Electro Metal Pressing (Pvt) Ltd., நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.