• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மைக்கான ஆராய்ச்சிப் பிரிவொன்றைத் தாபித்தல்
- ஊக்கமருந்து பாவனையை இல்லாதொழித்தல் இது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஊக்கமருந்து சம்பந்தமாக செயலாற்றும் சருவதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றுதல் போன்ற நோக்கங்களை கொண்டு 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் பாவிப்பதற்கு எதிரான சமவாய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மையானாது தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த முகவராண்மைக்கு கட்டடமொன்று சுகததாச விளையாட்டு கட்டடத் தொகுதியில் தற்போது நிருமாணிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஆபத்தினை குறைக்கும் நோக்கில் இதற்குரிய ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான இரசாயனகூட ஆராய்ச்சிப்பிரிவொன்றை இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மைக்காக நிருமாணிக்கப்பட்டு வரும் கட்டட மனையிடத்தில் நிருமாணிப்பதற்கும் இதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.