• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் துறை தொடர்பான சருவதேச மாநாட்டை நடாத்துதல்
- இலங்கை உறுப்புரிமை கொண்டுள்ள ஆசிய விளைவுப்பெருக்க அமைப்பு, ஆபிரிக்க - ஆசிய கிராமிய அபிவிருத்தி அமைப்பு மற்றும் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி நிலையம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இலங்கையில் இரண்டு சருவதேச மாநாடுகளை நடாத்துவதற்கு கமத்தொழில் அமைச்சினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கமத்தொழில் இடர் முகாமைத்துவம், காலநிலை மாற்றங்களுக்கு இசைவடைவதற்குத் தேவையான கொள்கை நிகழ்ச்சித் திட்டங்கள் உட்பட திட்டமிடல் மீளாய்வு மற்றும் இவற்றுக்கு ஏற்ற நிலைபேறுடைய அபிவிருத்தி திறமுறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கமத்தொழில் இடர்முகாமைத்துவம், காலநிலை மாற்றங்களுக்கு இசைவடைதல் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறையினை 2017 செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகியிலிருந்து 15 ஆம் திகதி வரையும் நடாத்துவதற்கும் உலக சந்தையிலுள்ள பிரதான உணவு வகைகளின் பாதுகாப்பு தொடர்பிலான அறிவு, புதிய அபிவிருத்தி முறைகள் மற்றும் கமத்தொழில் உணவுகளுக்கான உயர் உணவு பாதுகாப்பு முறைகளை இனங்காணுதல் இவை தொடர்பில் கலந்துரையாடுதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு உணவு பாதுகாப்பு தரங்களை வலுப்படுத்தும் சருவதேச மாநாட்டை 2017 ஒக்றோபர் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து நவெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையும் இலங்கையில் நடாத்துவதற்கு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.