• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹோமாகம பிரதேசத்தில் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் (தொழினுட்ப நகரம்)
- மேற்குப் பிராந்திய மாநகர திட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் தொழினுட்ப நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹோமாகம - பிட்டிபன தொழினுட்ப நகரம் சார்ந்த வீதி உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதன்பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்து இந்த பிரதேசத்தை தேசிய போக்குவரத்து வலையமைப்புடன் முறையாக தொடர்புபடுத்துவதை நோக்காகக் கொண்டு, 3,143 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவின் கீழ் பின்வருமாறு புதிய இரண்டு பாதைகளை நிருமாணிப்பதற்கும் தற்போது நிலவும் மூன்று பாதைகளை விருத்தி செய்வதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கொட்டாவையிலிருந்து மாஹேனவத்த வரை 6.18 கிலோ மீற்றர் கொண்ட நான்கு சாலை வரிசைகளுடனான புதிய நுழைவுப்பாதை;

* மாஹேனவத்த கொத்தணியில் அமைந்துள்ள அரசாங்க பல்கலைக்கழகங்களில் 1.7 கிலோ மீற்றர் கொண்ட உள்ளக வீதிகளை நிருமாணித்தல்;

* தம்பே - பிட்டிபன வீதியும் உள்ளடங்கலாக பிட்டிபன - தலகல வீதியின் 8.83 கிலோ மீற்றரை விருத்தி செய்தல்;

* 2.9 கிலோ மீற்றர் நீளமான உடுவன பன்சல சந்தி வீதியை விருத்தி செய்தல்;

* கஹதுடுவயிலிருந்து கொட்டாவ - தலகல சந்தி வரை 3 கிலோ மீற்றர் நீளமான நுழைவுப்பாதையை விருத்தி செய்தல்.