• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
70 ஆவது சுதந்திரதின விழா
- 2018 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 70 ஆவது சுதந்திரதின விழா மற்றும் அதற்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும் கலாசார அம்சங்களை நடாத்துவதற்கு நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்து தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பொருட்டும் செயற்படுத்தும் பொருட்டும் மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.