• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல் (DRIVE Project)
- வட மாகாண மக்களுக்கு சிறந்த தரம்மிக்க சுகாதார சேவையொன்றை வழங்குவதற்கும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விருத்தி செய்து கொண்டு இந்த மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துதவற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவி மற்றும் இணைந்த நிதியத்தின் பங்களிப்புடன் வட மாகாணத்திலுள்ள கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளையும் பருத்தித்துறை மற்றும் மாங்குளம் ஆகிய ஆதார வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.