• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய மற்றும் ஈடுசெய்யும் மருந்துகள் தொடர்பான சருவதேச மாநாடு கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி
- நோய்களை நிர்ணயிக்கும் போதும், நோய்களை முகாமிக்கும் போதும், நோய்களை தடுக்கும் போதும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் நிலவும் சாட்சியை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடுகளையும் தரம் மிக்க உற்பத்திகளை நவீன விஞ்ஞான தொழினுட்பத்தின் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு நிபுணர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிபுணத்துவ மற்றும் புதிய அறிவுகளை பரிமாறிக் கொள்ளும் நோக்கில் Trad Med International 2017 - Sri Lanka என்னும் சருவதேச மாநாடு, கல்வி கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒன்றை 2017 நவெம்பர் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதிவரை இலங்கையின் அனுசரணையில் கொழும்பில் நடாத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.