• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை STEM (விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியை மேம்படுத்துதல்
- புத்தாக்கத்தினை முதன்மையாகக் கொண்டு அறிவினை அடிப்படையாய் கொண்ட பொருளாதாரத்தின் மூலம் உயர் வருமானம் பெறும் பொருளாதாரத்துடனான நாடொன்றாக இலங்கையை கொண்டுவரும் போது விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM கல்வி) ஆகிய விடயதுறைகளில் தேர்ச்சி மிக்க ஆளணி இருப்பது மிக முக்கியமானதாகும். அதேபோன்று கணனி, கணிதம், கட்டடக்கலை, பொறியியல், உற்பத்தி திட்டமிடல் வடிவமைப்பு, ரொபோ விஞ்ஞானம் மற்றும் நநொ தொழினுட்பம், உயிரியல் தொழினுட்பம் போன்ற வளர்ந்துவரும் தொழினுட்பம் சார்ந்த தொழில்களின் பால் தொழிற்சந்தை செல்லும் சருவதேச போக்கினை காட்டுகின்றதோடு, இதன் உயர் சம்பளத்துடனான தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கும் STEM கல்வி மூலம் கிடைக்கும் அறிவு ஏதுவாய் அமையும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் பல அதன் தொழினுட்ப விருத்தியினை மேம்படுத்தும் நடவடிக்கையொன்றாக STEM கல்வியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக, விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையில் STEM கல்வியை மேம்படுத்துவதற்கும் புத்தாக்கங்களுக்கு ஏதுவாய் அமையும் பிற இதற்குச் சமமான விடயத்துறைகளை நாட்டின் கல்வி முறைமைக்கு அறிமுகப்படுத்துவற்கு திறமுறை ரீதியிலான செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு கல்வி, உயர் கல்வி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி, விஞ்ஞானம், தொழினுட்ப மற்றும் ஆராச்சி ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.